நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. அன்றிலிருந்து தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்தது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் மகளிருக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் மகளிர் அமைப்பின் ஒன்றிய நிர்வாகி பிரியதர்ஷினி தமிழக வெற்றி கழக கட்சியிலிருந்து விலகினார். மேலும் கொடிக்கம்பம் மற்றும் காரில் இருந்து கொடியை அப்புறப்படுத்தினார்.