sivakarthikeyan
sivakarthikeyan
இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களின் பார்வையும் சிவகார்த்திகேயன் மீதுதான் திரும்பியிருக்கிறது. விஜய்க்கு அடுத்த இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிக்க போகிறாரா? அதற்கான வேலைகளில்தான் ஈடுபட்டு வருகிறாரா என்றெல்லாம் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கு காரணம் விஜய் அரசியலில் தீவிரமாக இறங்க இன்னொரு பக்கம் அஜித் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
கோட் படத்தில் விஜய் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியை கொடுத்ததில் இருந்தே இது மாதிரியான பேச்சு அடிபட்டு வந்தது. கையில் துப்பாக்கியை கொடுத்துட்டாரு விஜய். இனிமேல் என் இடத்தை நீங்கதான் பார்க்கனும்னு சொல்லாம சொல்லிட்டாரு என்றெல்லாம் பேசினார்கள். இதை பற்றி சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது அவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்ற வகையில் பதில் கூறினார்.
ஆனால் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் செய்யும் செயல்கள் தன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு யுத்தியாகவேதான் ரசிகர்கள் பார்த்தனர். அந்த வகையில் நேற்று உலக செஸ் சாம்பியன் குகேஷை அழைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி கௌரப்படுத்தினார். அதுவரை எந்த ஒரு பெரிய நடிகர்களும் செய்யாத ஒன்றை முதல் ஆளாக சிவகார்த்திகேயன் செய்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு அடுத்து ரஜினி இன்று குகேஷை அழைத்து பாராட்டி புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார். ரஜினிக்கு முன்னாடியே சிவகார்த்திகேயன் இதை செய்தது பெரும் பேசு பொருளாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நேற்று பத்திரிக்கையாளர்கள் மொத்தமாக சிவகார்த்திகேயனை நோக்கிதான் படையெடுத்தார்கள்.
இப்படி தான் செய்யும் செயலால் சிவகார்த்திகேயன் அந்த டாப் 4 இடத்தை அடைய முயற்சிக்கிறார் என்று சில பேர் கூறி வருகிறார்கள்.