சென்னையில் வெடித்த போராட்டம்… களத்தில் குதித்த ஜெயக்குமார்… அதிமுகவினர் சாலை மறியல்… பரபரப்பு.!!!
SeithiSolai Tamil December 26, 2024 07:48 PM

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றதால் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடு முயன்ற பாஜகவினரையும் கைது செய்துள்ளனர். அதோடு பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் வாயில் முன்பாக மறியல் போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர். மேலும் இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.