மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இந்து ஜாக்ரன் மஞ்ச் எனும் இந்து அமைப்பினர், நேற்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சாண்டா கிளாஸ் ஆடை அணிந்து கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமிட்டு உணவு டெலிவரி செய்ய சென்றுக் கொண்டிருந்த சொமேட்டோ டெலிவரி ஊழியரை கட்டாயப்படுத்தி, கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பைக் கழற்ற செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்து அமைப்பினர் சொமேட்டோ ஊழியரை வலுக்கட்டாயமாக உடையை கழற்ற வைத்தனர். அவரது சாண்டா கிளாஸ் உடையால் இந்து அமைப்பினர் கோபமடைந்து, “இந்துக்களின் பண்டிகைகளின் போது ஏன் காவி உடை அணியவில்லை” என்று கேள்வி எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். “தீபாவளிக்கு ஏன் கிருஷ்ணர் வேடமிட்டு உணவு டெலிவரி செய்யவில்லை?” என்று அந்த ஊழியரிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர். தன்னுடைய அலுவலகம் இப்படி உடையணிந்து டெலிவரி செய்ய சொன்னதாக அவர் கூறிய நிலையில், உடையைக் கழற்றச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.