பெண்களுக்கான உதவி முதல் முதல் ஆம்புலன்ஸ், அவசர உதவி போலீஸ் வரை... உங்க செல்போனில் இருக்க வேண்டிய முக்கிய தொலைப்பேசி எண்கள்!
Dinamaalai December 27, 2024 10:48 AM

வாழ்க்கை இயந்திரத்தனமாக போய் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும்... இல்லையில்லை... உலகம் முழுவதுமே வன்முறை சம்பவங்கள்.. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் தமிழகத்தின் நிலைமையை எல்லாம் சொல்லி  மாளாது. திரும்பும் திசையெல்லாம் டாஸ்மாக் கடைகளும், போதைக்கு அடிமையானவர்களுமாக  பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. நீதிமன்ற வாசலில் வெட்டிக் கொலைச் செய்கிறார்கள். கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறார்கள்.

இந்நிலையில் அனைவருக்குமே ஆறாம் விரலாய் முளைத்திருக்கும் செல்போனில் எத்தனையோ புகைப்படங்களையும், பாடல்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வெச்சிருக்கீங்க. கூடவே இந்த அவசியமான தொலைப்பேசி எண்களையும் சேமித்து வெச்சுக்கோங்க. உங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு. இதில், யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாதீங்க. தெரிஞ்சவங்க, பக்கத்து வீட்டுக்காரங்க என்று எந்த பரிதாபமும் பார்க்காதீங்க. பெரும்பாலான குற்றங்களில் தெரிந்தவர்கள், பழகியவர்கள் தான் ஈடுபடுகிறார்கள். 

இந்த உதவி எண்களை அழைக்க நாம் பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை.  போனில் பேலன்ஸ் இல்லையென்றாலும் கவலையில்ல்லை.  அந்த சமயங்களில் கூட இந்த அவசரகால உதவி எண்களை தொடர்புகொள்ள முடியும். அந்த வகையில் ஒவ்வொரு கைபேசியிலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.  

1. அவசர உதவி அனைத்திற்கும் - 112
2. வங்கித் திருட்டு உதவிக்கு - 9840814100
3. மனித உரிமைகள் ஆணையம் - 044-22410377
4. மாநகரப் பேருந்தில அத்துமீறல் - 09383337639
5. போலீஸ் SMS - 9500099100
6. போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS - 9840983832
7. போக்குவரத்து விதிமீறல்கள் SMS - 98400 00103
8. போலீஸ் - 100
9. தீயணைப்புத்துறை - 101
10. போக்குவரத்து விதிமீறல்கள் - 103
11. விபத்து - 100, 103
12. ஆம்புலன்ஸ் - 102, 108
13. பெண்களுக்கான அவசர உதவி - 1091


14. குழந்தைகளுக்கான அவசர உதவி - 1098
15. அவசர காலம் மற்றும் விபத்து - 1099
16. முதியோர்களுக்கான அவசர உதவி - 1253
17. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033
18. கடலோர பகுதி அவசர உதவி - 1093
19. ரத்த வங்கி அவசர உதவி - 1910
20. கண் வங்கி அவசர உதவி - 1919
21. விலங்குகள் பாதுகாப்பு - 044 -22354959/22300666
அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா நாட்டிலும் செயல்படும்.  இந்த எண்கள் அனைத்தும் நமது செல்போன் லாக்கில் இருந்தாலும் இயங்கும். அதே போல் பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லறையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு 93833 37639 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். 

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் எனில்  மாநில நுகர்வோர்க்கு 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828 என்ற இலவச எண்ணில்  அழைத்து புகார் கூறலாம். 

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 - 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்- 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்க்கு SMS - 95000 99100

இந்த எண்கள் எல்லாம் ஆபத்து சமயங்களில்  தேவைப்படும் எனவே அவசர உதவி எண்களுடன் இதனையும் சேமித்து வைத்துக் கொள்வது  உதவியாக இருக்கும்.  

இந்த லிஸ்ட்ல இல்லாத வேறு சில தொலைப்பேசி எண்களும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது சிக்கலான நேரத்தை, சூழ்நிலையை நீங்கள் சமயோசிதமாக கடந்து வந்திருக்கலாம். அதை கமெண்ட் செக்ஷன்ல சொன்னா இதைப் படிக்கிற மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் இதைப் பகிருங்க.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.