'உயிருக்கு ஆபத்து...' போலீசார் அலட்சியத்தால் இளம்பெண் குத்திக் கொலை... காதலன் வெறிச்செயல்!
Dinamaalai December 28, 2024 01:48 AM

அஸ்ஸாம் மாநிலத்தில் கௌகாத்தி  நகரில் லேட் கேட் பகுதியில் வசித்து வருபவர்  மவுசுமி கோகாய். இவரை காதலித்து வந்த பூபென் தாஸ்  கோகாயை அவருடைய வீட்டுக்கு வெளியே கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து டிஜிபி ஜி.பி.சிங் வெளியிட்ட செய்தியில்,  தான் பயணம் செய்வதற்காக ஆன்லைன் ஆப் மூலமாக வாகனம் ஒன்றை முன்பதிவு செய்து விட்டு, கோகாய் வீட்டுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்துள்ளார். 

அப்போது காரில் வந்த பூபென் தாஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகாயை குத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கோகாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக கோகாயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், பூபென் தாஸ் சிக்கியதில், அவர் கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அவரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இந்த சம்பவத்திற்கு நடப்பதற்கு முன்பு, பூபென்னுக்கு எதிராக பான் பஜார் காவல் நிலையத்தில், அவரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பாக கூறி கோகாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகாரளித்த அடுத்த நாள் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசார், கோகாயின் புகாரை ஒழுங்காக விசாரித்திருந்தால் இந்த கொலையைத் தவிர்த்திருக்கலாம் என்று அந்த பகுதி மக்கல் குற்றம் சாட்டினர். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.