உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில், மெஹ்தாப் என்ற இளைஞனுடன் இளம்பெண் ஒருவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 22 அன்று, திருமண விழாக்கள் மிகவும் உற்சாகத்துடன் தொடங்கியது.
மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினரை இனிப்புகள் வழங்கி வரவேற்று, பின்னர் அவர்களுக்கு உணவு பரிமாறினர். ஆனால், மணமகன் தரப்பு உறுப்பினர் ஒருவர், சப்பாத்தி தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறி பிரச்சனையை தொடங்கினார்.
மணமகன் தரப்பினரை சமாதானம் செய்ய முயற்சித்த போதிலும், மணமகளின் குடும்பத்தை குற்றம் சாட்டி விட்டு, வனமகன் குடும்பத்தினர் வெளியேறினர். சிறிது நேரம் கழித்து மணமகன் உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி மணமகள் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், டிசம்பர் 24 அன்று காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.