இந்தியர்களின் மாறிவரும் உணவுப் பழக்கத்தால் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களின் தங்களின் வணிகத்தை உயர்த்தியுள்ளது. ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ZEPTO 2024 ஆம் ஆண்டில் 2 கோடி (20 மில்லியன்) சிற்றுண்டி பாக்கெட்டுகளை (நொறுக்கு தீனி) நள்ளிரவில் டெலிவரி செய்ததாகக் கூறியது. நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை அதிக சிற்றுண்டி ஆர்டர்களைப் பெற்றதாக ZEPTO தெரிவித்துள்ளது.
இவற்றில், மும்பை வாசிகள் அதிக ஆர்டர்களைப் பெற்றுள்ளனர். அதாவது மும்பையில் வசிக்கும் 31 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் ஆர்டர் செய்துள்ளதாக ZEPTO தெரிவித்துள்ளது. ZEPTO அதன் டெலிவரி தொழிலாளர்கள் இந்த ஆண்டு 340 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இது பூமியை 8,000 முறை சுற்றி வருவதற்கு சமமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.