இது காலை உணவு திட்டமா? இல்லை உப்புமா கம்பெனியா? சீமான் கேள்வி
Webdunia Tamil December 29, 2024 08:48 PM


அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு காலை உணவு திட்டத்தை நடத்தி வரும் நிலையில், வாரத்தில் ஏழு நாட்களில் 5 நாட்களில் உப்புமா போடுகிறார்கள். இது என்ன காலை உணவு திட்டமா அல்லது உப்புமா கம்பெனி திட்டமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: "60 வருடமாக ஆட்சி செய்து, காலையில் சாப்பிட்டு வர முடியாத நிலைமையில் தான் நமது பிள்ளைகளை வைத்து உள்ளீர்களா? இது என்ன, சோமாலியா, நைஜீரியா நாடுகள் மாதிரி இருக்கிறது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

"காலையில் என்ன சாப்பாடு வருகிறது? பால், முட்டை போன்றவை வைத்தால் சரி. ஆனால் 7 நாட்களில் 5 நாட்கள் உப்புமா தான் போடுகிறார்கள். நீங்கள் உப்புமா கம்பெனி தான் நடத்துகிறீர்கள்," என்று தெரிவித்தார்.

சீமானின் இந்த கருத்துக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. "காலை உணவு திட்டத்தை தாய்மார்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் சீமான் பேச்சு தமிழர்களுக்கு எதிராக உள்ளது. அவரின் அரசியல் தரம் அவ்வளவுதான்," என்றும் திமுக தெரிவித்துள்ளது.


Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.