சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட முயன்றதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் தனியார் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தடையை மீறி போராட முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.