சைபர் கிரைம் குற்றவாளிகள் பலவிதமான முறைகளில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்க்கும் நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். நவம்பர் மூன்றாவது வாரத்தில் பொதுத்துறை வங்கியில் இருந்து அவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது. அதில் கேஒய்சி விவரங்கள் தாமதமாகிவிட்டதாகவும், நடவடிக்கை எடுக்க தவறினால் வங்கி கணக்கு முடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தது.
அதனை உண்மை என்று நம்பிய அதிகாரி அந்த மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்து ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்தார். சிறிது நேரத்தில் அந்த அதிகாரியின் செல்போனுக்கு ஓடிபி வந்தது. அவர் அதனை யாருக்கும் பகிரவில்லை. இருப்பினும் ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்ததால் சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 12 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.