ஜிம்பாவே நாட்டின் வடக்கு பகுதியில் மட்டுசடோனா தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் டினோடெண்டா பூண்டு என்ற சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு எ8 வயது ஆகும் நிலையில் தவறுதலாக வனப்பகுதிக்குள் காணாமல் போய்விட்டான். கடந்த மாதம் 27ஆம் தேதி சிறுவன் காணாமல் போன நிலையில் கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். அந்த வனப்பகுதிக்குள் சிங்கங்கள் மற்றும் யானைகள் போன்ற ஆபத்தான வனவிலங்குகள் இருக்கும் நிலையில் சிறுவன் 5 நாட்களாக அங்கு உயிர் பிழைத்தது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.
அந்த சிறுவன் நீரிழிப்பு காரணமாக பலவீனமான முறையில் மீட்கப்பட்ட நிலையில் அந்த கிராமத்தில் வறட்சி நிலவுவதால் அதிலிருந்து எப்படி உயிர் பிழைக்க வேண்டும் என்று அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளதால் அந்த முறையை பயன்படுத்தி சிறுவன் உயிர் பிழைத்ததாக கூறியுள்ளான். அந்த சிறுவன் ஆற்றங்கரையோரம் ஒரு குச்சிகளை பயன்படுத்தி குழி தோண்டி தண்ணீர் குடித்த நிலையில் ட்ஸ்வான்ஸா என்ற பழத்தை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளான். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவர் நலமுடன் வீட்டிற்கு திரும்பியது கிராமத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.