தக் லைப் - ரெட்ரோ ரெண்டு படத்தோட கதையும் ஒன்னா?!.. என்னப்பா பீதிய கிளப்புறீங்க!..
CineReporters Tamil January 08, 2025 03:48 AM

Thug Life Retro: ஒரே கதைகளை இரண்டு இயக்குனர்கள் இயக்குவது என்பது எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து இருக்கிறது. ஆனால், வேறு நடிகர்கள், வேறு களம் என இருக்கும்போது அது பெரிதாக தெரியாது. ஒரு கதையை இரண்டு இயக்குனர்கள் யோசிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு இயக்குனரும் தங்களின் ஸ்டைலில் எடுக்கும்போது அது மாறுபட்டு தெரியும்.

எம்.ஜி.ஆர் சிவாஜி: இது போல பலமுறை நடந்திருக்கிறது. ஒரே கதையில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நடித்திருக்கிறார். நன்றாக யோசித்தால் மட்டுமே அது புரியும். திரைக்கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் இருக்கும். எனவே, இரண்டும் வெவ்வேறு படங்கள் போல தோன்றும். ஒரு ஹிட் படத்தின் கதையை உல்டா செய்து வேறு மாதிரி எடுக்கப்பட்டு ஹிட் அடித்த படங்களும் பல இருக்கிறது.


தலைநகரம் படம் பற்றி பேசிய சுந்தர் சி ‘அந்த படத்தின் கதை ஒரு மலையாள படத்தில் இருந்து சுட்டது என்பதே எனக்கு தெரியாது. இயக்குனர் என்னிடம் அதை மறைத்துவிட்டார். ஒரு நாள் என் அம்மா டிவியில் பார்த்து சொன்னபோதுதான் எனக்கே அது தெரிந்தது. இதில் காமெடி என்னவெனில் தலைநகரம் படத்தின் கதையை தெலுங்கில் ரீமேக் செய்தார்கள்’ என சொல்லி சிரித்தார்.

இரண்டு படம் ஒரே கதை: 90களில் வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் கதையும், பிரவீன் காந்த் இயக்கிய ஜோடி படத்தின் கதையும் ஒன்றுதான். ஆனால், இரு இயக்குனர்களும் தங்களின் ஸ்டைலில் திரைக்கதை அமைத்திருந்தார்கள். இந்த படங்களின் கதை ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டதுதான்.


தேவர் மகன்: கமல் எழுதி, நடித்த தேவர் மகன் படமே காட் ஃபாதர் படத்தின் கதைதான். இரு படங்களின் ஒரு வரிக்கதையை யோசித்து பார்த்தால் அது புரியும். இப்படி உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சில ஹாலிவுட் படங்களின் கதை அல்லது கதை சொல்லும் விதம் போன்றவற்றை மணிரத்னம் மற்றும் கமல் இருவருமே சுட்டு படமெடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், மணிரத்னம் - கமல் இணைந்து உருவாகி வரும் தக் லைப் படத்தின் கதையும், கார்த்திக் சுப்பாராஜ் - சூர்யா கூட்டணிய்ல் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று என்கிறார்கள் சிலர். ஆனாலும், கதை நடக்கும் களம், பின்னணி ஆகியவை வேறு என்பதல இரண்டு படக்குழுவும் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.