தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஷால். இவரது நடிப்பில் தற்போது மத கஜ ராஜா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்றிருந்தபோது உடல் நடுக்கத்துடன் ரசிகர்களை கவலையடைய செய்யும் விதத்தில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஷால் அவர்களது மேலாளர் விஷால் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி விஷால் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு துப்பறிவாளன் 2 படபிடிப்பில் பங்கேற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.