அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகிறார்கள்.
சுமார் 10,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிறையான நிலையில், ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமான நிலையில் 5 உயிரிழந்துவிட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.