திரை உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் சங்கர். சங்கர் இயக்கிய படம் என்றாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். வருகின்ற 10 ஆம் தேதி சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சங்கர் அவர்கள் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அந்த பேட்டியின் போது அவரிடம் பயோபிக் படம் எடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “இதுவரை பயோபிக் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒருவேளை பயோபிக் படம் எடுத்தால் ரஜினியின் பயோபிக்தான் எடுப்பேன். அவர் நல்ல மனிதர்” எனக் கூறியுள்ளார்.