டெல்லி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!
Newstm Tamil January 10, 2025 10:48 AM

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த 3 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், வேட்புமனு தாக்கல் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17. வேட்புமனுக்கள் ஜனவரி 18-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20-ம் தேதி கடைசி நாள். தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என அறிவித்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிக்கு அரசியல் களம் காத்திருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அங்கே கட்சித் தாவல்கள், காரசார வாக்குவாதங்கள் என அரசியல் களம் களை கட்டியுள்ள நிலையில் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் கடும் குளிருக்கு இடையேயும் அரசியல் களத்தில் அனல் பறக்கும். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.