திருப்பதி சம்பவம் தொடர்பாக, சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்; ரோஜா கோரிக்கை..!
Seithipunal Tamil January 10, 2025 03:48 PM

திருப்பதியில் ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு இலவச டோக்கன் வழங்கும் நிகழ்வில்  கூட்டம் நெரிசலில் சிக்கி 06 பேர் உரிழந்ததோடு, பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு  பொறுப்பேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஆந்திர அமைச்சர் ரோஜா விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில், அல்லு அர்ஜுன் கைது செய்தது போல், திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த விஷயத்திற்கு சந்திரபாபு நாயுடு மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்  கூறியுள்ளார். அத்துடன், திருப்பதியில் லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த, துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்கள், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா, அல்லது சந்திரபாபு நாயுடுடன் சேர்ந்து அவரும் ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடிக்கு தான் ஒரு கோரிக்கை வைப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ரோஜா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.