அண்ணா பல்கலைக்கழக வழக்கு...தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
Top Tamil News January 10, 2025 07:48 PM

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், காவல் ஆணையர் மீது நடவடிக்கை என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.