Siragadikka Aasai: ரோகிணியின் திருட்டுத்தனம் மட்டும் மாறவே இல்லையே? அடுத்த பிரச்னை பார்சல்…
CineReporters Tamil January 10, 2025 07:48 PM

Siragadikka Aasai: மீனா மற்றும் முத்து இருவரும் கதிர் குறித்து தேடி அவருடைய புகைப்படம் வேண்டும் என்ற முடிவிற்கு வருகின்றனர். கோயிலில் வைத்து பணத்தை கொடுத்ததால் அங்குள்ள சிசிடிவி கேமராவில் அவருடைய முகம் பதிந்திருக்கும் என கூறுகிறார் மீனா.

ஆனால் ரோகிணி அதெல்லாம் வேண்டாம் எனக் கூறி விடுகிறார். நாங்க தானே பணத்தை தொலைத்தோம். நாங்களே தேடி கண்டுபிடித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடுகிறார். ஏன் என விஜயா கேட்க, இப்போ இவர் கண்டுபிடிச்சா கடைசி வரையும் மனோஜை அத சொல்லி மட்டம் தட்டிக்கிட்டே இருப்பாரு.

நாங்கதானே பணத்தை தொலைச்சோம் அதை நாங்களே தேடிக் கொள்கிறோம் என கூறிவிடுகிறார். முத்துவும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்களே தேடிக்கோங்க எனவும் கூறிவிடுகிறார். ஆனால் பணம் தொலைந்தால் அதை பொதுவில் வைக்க வேண்டும். வீட்டில் வந்து உண்மையை சொல்ல வேண்டும் என மிரட்டி விட்டு செல்கிறார். ( அது என்னமோ ரோகிணிக்கிட்ட கஷ்டமாச்சே)

முத்து மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். புது வில்லியால் பிரச்சனை வருமா என முத்து கேட்க வந்தா என் ஆளுக்கிட்ட வச்சு சமாளிச்சிக்குவேன் என்கிறார். யாரு உன் ஆளு என்னன்னு கேட்க, மாலை மற்றும் பாடலினை வைத்து குளூ கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போதும் முத்து கண்டுபிடிக்காமல் போகிறார். ( இதையெல்லாம் ரொமான்ஸ்னு நம்ப வைக்கிறீங்க)

அடுத்த நாள் காலை வித்யாவிற்கு மீனாவை சைட் அடித்த நபர் உதவி செய்து கொண்டிருக்கிறார். அப்போ அங்கு வரும் ரோகிணி வீட்டில் நடந்த விஷயங்களை கூறிக் கொண்டிருக்கிறார். நீ தேடப் போறியா என கேட்க அதற்கு ஒரு ஆளை வைத்திருப்பதாக கூறி சிட்டியை கூறுகிறார்.

நாங்க போய் சிசிடிவி கேமராவை எடுத்தால் மீனா ஐடியாவை வைத்து தான் செய்கிறோம் என கூறிவிடுவார்கள். ( இப்பயும் அதை வச்சுத்தானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க) அதனால் இதற்கு சரியான ஆள் சிட்டி தான் என கூறி விடுகிறார். முத்து மற்றும் சத்யா இருவரும் வீடியோ லீக் செய்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். சிட்டியின் ஆள் யாரிடமாவது இது குறித்து விசாரிக்க வேண்டும் என சத்யாவிடம் கூறுகிறார் முத்து.

ரோட்டில் சிட்டியை பார்க்கும் ரோகிணி தன்னுடைய பணம் திருட்டு போன விஷயம் குறித்து கூறி அதை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் எனவும் சிசிடிவி கேமரா விஷயத்தையும் கூறுகிறார். பி ஏ குறித்து கேட்க அவனை கேரளாவிற்கு பேக் செய்து விட்டதாக சமாளித்து விடுகிறார். ( பெரிய ஆப்பா பின்னாடி வரும்னு நினைக்கிறேன்)

ரோகிணிக்கு வரிசையாக பிரச்சினைகள் அடி எடுத்துக் கொண்டிருக்க இனிமே ஆட்டம் சூடு பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.