தமிழக வங்கிகளுக்கு அபராதம் விதித்த RBI.. விதிகளை மீறியதால் 10 தனியார் நிறுவனங்களின் உரிமமும் ரத்து!
ET Tamil January 10, 2025 07:48 PM
இந்திய ரிசர்வ் வங்கி KYC விதிமுறைகளை மீறியதாகக் கூறி பல கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத பிற நிறுவனங்கள்மீதும் மத்திய வங்கி பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு மட்டுமின்றி, பல வங்கிகளுக்கு ரூ.50,00 வரை அபராதம் விதித்துள்ளது.குறிப்பாக பல வங்கிகள் கடன் தொடர்பான விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய் விசாரணையின்போது விதிமீறல்களை கண்டறிந்த வங்கிகளுக்கு அபராததும் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வங்கிளும் அடங்கும.இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 9 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் நான்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஒரு NBFC மீது பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேற்கு வங்கத்தின் 10 நிறுவனங்களின் உரிமம் (CoR) ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.இந்தியன் ஸ்கூல் ஃபைனான்ஸ் லிமிடெட் பிரதான நிர்வாகப் பணிக்காக அதாவது உள் தணிக்கைக்காக வெளி ஆடிட்டரை அவுட்சோர்சிங் செய்ததற்காக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. KYC தொடர்பான விதிகளை மீறிய தமிழக மற்றும் பிற வங்கிகளுக்கு ரூ.50,000 அபராதம்!பெல்காம் மாவட்ட வருவாய் ஊழியர் கூட்டுறவு வங்கி லிமிடெட் (கர்நாடகம்), பட்லகுண்டு கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட் (திண்டுக்கல் தமிழ்நாடு) மற்றும் சிவகாசி கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட் (தமிழ்நாடு) ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி தலா ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. மூன்று வங்கிகளும் வாடிக்கையாளர்களின் KYC பதிவுகளை மத்திய KYC பதிவுப் பதிவேட்டில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவேற்றத் தவறிவிட்டன.அதுபோக ஜந்தா சககாரி வங்கி லிமிடெட் வங்கி புனே சில கடன் வாங்கியவர்களின் கடன் கணக்குகளை செயல்படாத சொத்துகளாக வகைப்படுத்தத் தவறிவிட்டது. இது தவிர, சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கு பிளாட் ரேட் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு விதிகள் மீறியதால் வங்கிக்கு ரூ.17.50 லட்சம் அபராதம் ஆர்பிஐ தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது.உரிமம் ரத்து செய்யப்பட்ட NBFC நிறுவனங்கள்!1. Chapter Equi Pref Limited2. Agrani Credit and Finvest Private Limited3. Amit Goods and Supplier Private Limited4. Anchal Credit Capital Private Limited5. Anika Tie-Up Private Limited6. Anika Finvest Private Limited7. ANM Financial Services Limited8. Anuvrat Transport System Limited9. Apurva Finance Private Limited10. Aerion Commercial Private Limitedஇந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து மிகக் கூர்மையாகவும் தீவிரமாகவும் வங்கிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது மக்களின் மீதான நலனைக் காட்டுகிறது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.