OTT Release: திரையரங்க திரைப்பட வெளியிட்டு ஆகிவிட தற்போது ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் இருக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் ஓடிடி குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த வாரம் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி உருவாக்கும் விதமாக ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே வெளியாக இருக்கிறது.
வித்யா பிரதீப் நடிப்பில் திரும்பிப் பார்த்த திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது. ஆனால் இந்த வாரம் வெப் சீரிஸ் விரும்பிகளுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகவே அமைந்திருக்கிறது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் ஹிந்தி மொழியில் பிளாக் வாரண்ட், ஆக்ரா ஆஃவயர், ஆங்கில தொடரான ஐ அம் எ கில்லர் சீசன் 6, ஜப்பனீஸ் தொடரான அசுரா, ஆங்கில தொடரான அமெரிக்காவின் பிரைம்வல், ஸ்பானிஷ் தொடரான ஆல்பம் சீசன் 3, பேக் ப்ரொபைல் சீசன் 2 உள்ளிட்ட சீரிஸ்கள் வெளியிடப்பட இருக்கிறது.
அமேசான் பிரைம் ஓடிடியில் பச்சலாமலி, பிரேமி சூடு என்ற தெலுங்கு திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து பெரிய அளவிலான தமிழ் படங்களில் ரிலீஸ் இல்லை என்பதால் இந்த வாரம் ஓடிடி டல்லடிக்கும்தான்.