பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (வயது 80) இன்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார்.
திருச்சூரில் (கேரளா) உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள ஜெயச்சந்திரன், சிறந்த பின்னணி பாடகருக்காக தேசிய திரைப்பட விருதையும் வென்றுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருது, கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவரது மறைவு திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். அவரது பெரும் பங்களிப்பு இசை உலகில் என்றும் நினைவில் நிற்கும்.
பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மறைந்தாலும் அவர் பாடிய, 'ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு', 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி', ’கொடியிலே மல்லிகை பூ’, ’கத்தாழம் காட்டுவழி’ உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்.