உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 85-வது இடத்திற்கு சரிந்த இந்தியா; முதலிடத்தில் சிங்கப்பூர்..!
Seithipunal Tamil January 10, 2025 02:48 PM

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் சிங்கப்பூர்முதலிடம் வகிப்பதோடு, ஜப்பான் 193 நாடுகளுக்கான விசா-இல்லா அனுமதியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் 192 நாடுகளுக்கு விசா-இல்லா அனுமதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன. 

192 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழையும் அனுமதியுடன் ஆஸ்த்ரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்ஸ்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே,ஸ்வீடன் ஆகிய நாடுகள் நான்காவது இடத்தில் உள்ளன.

அத்துடன், பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளன. 

இந்த பட்டியலில் இந்தியா, கடந்த ஆண்டு 80-வது இடத்தில் இருந்து, தற்போது 05 இடம் பின் நோக்கி 85-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

பிரித்தானியா, கடந்த சில ஆண்டுகளில் அதன் பாஸ்போர்ட் சக்தியில் பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளது.

2025-இல் பாஸ்போர்ட் சக்தி பாதிக்கப்படுவதற்கு போர்கள், அரசியல் கலவரங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக உள்ளன.

இந்நிலையில், இந்தியர்களுக்கு 57 நாடுகள், விசா இல்லா சலுகைகளை வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.