வைகுண்ட ஏகாதசி மற்றும் விரதத்தில் பாரணை முறை என்பது என்ன பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளலாம். ஏகாதசிகளில் முக்கியமானது வைகுண்ட ஏகாதசி. இந்த ஆண்டின் முதல் ஏகாதசி இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த புனித நாளில் பக்தர்கள் பெருமாளை வழிபடுவார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று விரதமிருந்தால் நமது பாவங்கள் நீங்கி, சொர்க்கத்திற்கு செல்வோம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 'பூலோகத்தின் வைகுண்டம்' என்று சிறப்பித்து கூறப்படும் திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலில் ''கோவிந்தா, கோவிந்தா; முழக்கத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு தமிழத்தில் நடைபெறும் மிக பிரசித்தித்து பெற்ற விழாவாகும்.
இந்த விழா தென்னிந்தியாவில் உள்ள பெருமாள் கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நேற்றைய தினம் 12.22 மணிக்கு தொடங்கியது. இன்று 10.19 மணிக்கு முடிகிறது.
பாரணை நேரம்;
ஜனவரி 11 ஆம் தேதி காலை 7.14 முதல் 8.21 மணிக்கு முடியும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி விரதம் முடிவுக்கு வரும்.
சுக்ல பட்ச ஏகாதசி என்பது தமிழ் மரபுகளில் மார்கழி மாதமாக அழைக்கப்படுகிறது. திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும். யாரெல்லாம் ஏகாதசி விரதத்தை சிரத்தையாக கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு பெருமாள் அனுகிரகம் கிடைக்கும். மேலும் அவர்கள் இறந்ததும் வைகுண்டத்திற்கு செல்வார்கள் என்று நம்பப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி பூஜை விதிமுறைகள்:
வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருக்க வேண்டும். இதற்காக துவாதசி திதி அன்றே விரதம் இருக்க வேண்டும். அது போல் விளக்கேற்றி வைத்து பெருமாளை மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளுக்கான மந்திரங்களையும் ஸ்தோத்திரங்களையும் சொல்வது முக்கியமானது. இந்த நாளன்று பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வேண்டும்.ஜனவரி 11-ஆம் தேதி சூரிய உதயத்தின் போது பெருமாளுக்கு படையலிட வேண்டும்.
பாரணை என்றால் என்ன?
துவாதசி திதி அன்று துவரம் பரபப்பு, புளி சேர்ப்பதில்லை. அது போல் வெங்காயம், பூண்டு, மசாலா பொருட்களை சேர்க்கக் கூடாது. புளிக்கு பதிலாக எலுமிச்சை பழம் சேர்க்கலாம். நெல்லிக்காய்த் தயிர்ப்பச்சடி, அகத்திக்கீரை பொரியல், பருப்பு கடையல் உள்ளிட்டவைகளை சாப்பிடலாம். 21 காய்கறிகள் இடம் பெற வேண்டும். அதில் அகத்திக்கீரை, சுண்டக்காய், பரங்கிக்காய் உள்ளிட்ட காய்களை சேர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் சமைத்து படையலிட்டு வைகுண்ட ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.
பாராயணம் செய்ய வேண்டியது?
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஹரே ராம் ஹரே ராம் ராம ராம ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துலயம் ராம நாம வரானனே