பாஜக மகளிரணி துணைத்தலைவி மீது துப்பாக்கி சூடு; போலீசார் வழக்குப்பதிவு..!
Seithipunal Tamil January 10, 2025 02:48 PM

மத்தியபிரதேச மாநிலம் டியா மாவட்டத்தை சேர்ந்த பாஜக மகளிரணி துணைத்தலைவி நீத்து விஸ்வகர்மா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நேற்று ரத்தன்கர்க் மாதா கோவிலுக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோவிலுக்கு செல்லும் வகையில் நீத்து விஸ்வர்கர்மா மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், துப்பாக்கி சூட்டில் நீத்து  விஸ்வகர்மா காலில் காயம் ஏற்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீத்து மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய 03 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.