தமிழகத்தில் சீமான் தலைமையில் தனித்து இயங்கக்கூடிய கட்சியான நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலரும் விலகி வருகின்றனர்.
அப்படி விலகுபவர்கள் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தே செல்கின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மகாதேவன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "இன விடுதலை அரசியல் என்று நான் பயணித்து வந்த 10 ஆண்டுகளுக்கு மேலான இனிமையான பயணத்தை இன்றோடு முடித்துக்கொள்கிறேன் " இன்றோடு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்" இது நாள் வரையிலும் உடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.