தன்னிடம் பாடம் படிக்க வந்த சிறுமியை கடத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் மாண்டியா ஜே.பி.நகர் பகுதியில் டியூசன் வகுப்பு நடத்தி வந்துள்ளார் அபிஷேக் கவுடா என்ற ஆசிரியர். 25 வயதான அபிஷேக்கு திருமணமாகி 2 வயது குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில் டியூசன் படிக்க வந்த சிறுமியை காணவில்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி ஜே.பி.நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். டியூசன் வந்த மைனர் சிறுமியுடன் அபிஷேக்கு காதல் ஏற்பட்டதாகவும் அதனால் சிறுமியை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு அபிஷேக் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாலவள்ளி பகுதியில் சிறுமியுடன் அபிஷேக்கை கண்டு பிடித்துள்ளனர். சிறுமியை மீட்டு, அபிஷேக்கை கைது செய்த போலீசார் கடத்தல், சிறுமி மீது பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.