ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?
WEBDUNIA TAMIL January 08, 2025 03:48 AM

இந்த புதிய ஆண்டில் பூமிக்கு இணையாக ஒரே நேர்கோட்டில் நான்கு கிரகங்கள் தென்படும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது.

சூரிய குடும்பத்தில் பூமியை போலவே மேலும் பல கோள்களும், சிறுக்கோள்களும், விண்மீன்களும் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் பூமியை விட நீளமான அல்லது குறைவான சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருகையில் மிக அரிதாக அவ்வப்போது சில கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்வதுண்டு.

அதன்படி, இந்த ஆண்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களும் பூமியின் நேர்கோட்டில் ஒன்றாக காணப்படும் வானியல் அதிசயம் நிகழ உள்ளது. இந்த வானியல் நிகழ்வு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதிகாலை நேரத்தில் இந்த கிரக அணிவகுப்பை காணமுடியும் என்றும், தொலைநோக்கிகள் துணை கொண்டு மேலும் தெளிவாக இதை காணலாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.