vanangan
vanangan
அருண்விஜய்: அருண்விஜய்க்கு ஒரு பெரிய ப்ரேக் த்ரூ படமாக வணங்கான் படம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாலாவின் பட்டறையில் இருந்து வந்தாலே அவர் ஒரு ஆகச்சிறந்த கலைஞனாகத்தான் வெளியே வரமுடியும். தன்னிடம் வரும் எந்தவொரு நடிகரையும் பாலா அவ்வளவு சீக்கிரம் செதுக்கிவிட மாட்டார். கொஞ்சம் கொஞ்சமாக தன் ரசனைக்குள் கொண்டு வந்து ஒரு முழு சிற்பமாக மாற்ற கொஞ்ச அவகாசம் எடுத்துக் கொள்வார்.
பாலாவின் ரசனை:ஆனால் எக்காலத்துக்கும் அந்த சிற்பம் நின்னு பேசுபவையாக இருக்கும். அதைப் போலத்தான் அருண்விஜய்க்கும் இந்தப் படம் பெரிய மைல்கல்லாக இருக்கப் போகிறது. முதலில் சூர்யா நடிக்க இருந்து அதன் பின் இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகினார். சூர்யாவுக்கு பதிலாகத்தான் அருண்விஜய் இந்தப் படத்திற்குள் நுழைந்தார். ஏற்கனவே தக்க அந்தஸ்தை எதிர்பார்த்துதான் அருண்விஜயும் காத்திருக்கிறார்,
ரிலீஸில் சந்தேகம்; அதற்கேற்ப பாலாவின் படமும் அவருக்கு கிடைக்க அதை நல்ல முறையில் பயன்படுத்தியிருப்பார் என்றே தெரிகிறது. படத்தின் போஸ்டரை பார்த்தாலே எந்தளவுக்கு அருண்விஜய் மெனக்கிட்டிருப்பார் என்பதையும் ஊகிக்க முடிகிறது. இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் சினிமா வட்டாரத்தில் ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
அதாவது வணங்கான் படம் சொன்ன தேதியில் ரிலீஸாகுமா ஆகாதா? ஏனெனில் படத்தின் டிஜிட்டல் சாட்டிலைட் இன்னும் விற்பனை ஆகவில்லை என்றெல்லாம் ஒரு தகவல் வெளியானது. ஆனால் கண்டிப்பாக படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் தான் ரிலீஸ் செய்கிறது. ரெட் ஜெயண்டை பற்றி சொல்லவே வேண்டாம். தமிழ் நாட்டில் அவர்களுடைய ராஜ்ஜியம்தான்.
அதனால் பொங்கலுக்கு 10 படங்கள் ரிலீஸானாலும் வணங்கான் திரைப்படத்திற்கு ரெட் ஜெயண்ட் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளை ஒதுக்கியிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. மேலும் கேம் சேஞ்சர் படத்திற்கும் 500 திரையரங்குகள் ஒதுக்கியிருக்கிறார்களாம். இதன் மூலம் வணங்கான் திரைப்படத்திற்கு நல்ல ஒரு ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.