இன்று காப்புக்கட்டுதலுடன் ஆருத்ரா தரிசனம் துவக்கம்... நடராஜருக்கு தங்க கவசம்!
Dinamaalai January 04, 2025 12:48 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில்  நடைபெறும் ஆருத்ரா தரிசனம் திருவிழா இன்று ஜனவரி 4ம்  தேதி சனிக்கிழமை காலை காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மாணிக்கவாசகர் தங்க கேடயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும், நடராஜருக்கு தினமும் சிறப்பு மகா தீப ஆராதனை பூஜையும் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் ஜனவரி 13ம் தேதியன்று அதிகாலை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடராஜருக்கும், அம்பாளுக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெறும். 

உள்ளூர் மக்கள் திருவிழாவில் பங்கேற்க வசதியாக ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி ராமநாதபுரம்  மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.