என்னை கட்சியை விட்டு நீக்கியது கட்சி அடிப்படை விதிக்கு முரணான சட்ட விரோத நடவடிக்கை. ஒருவரை நீக்குவது என்பது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம். பொதுக்குழுவில் ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் கலைத்து விடவோ அல்லது செல்லாது என்று முடக்கி விடவோ முடியாது. கட்சியின் அடிப்படை சட்ட விதியில் முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையை நீக்க வழிவகை இல்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.