ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் பகுதியில் ஒரு வேனில் சிலர் பயணம் செய்தனர். இந்த வேன் கோகுண்டா-பின்ட்வாரா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு கனரக லாரி எதிர்பாராத விதமாக வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பி ஓடிவிட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.