“உன்னை பார்க்கணும்….” பிளான் போட்டு வர சொன்ன காதலி…. ஆத்திரத்தில் 2-வது காதலன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!
SeithiSolai Tamil January 01, 2025 06:48 PM

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சேத்தன் என்பவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரது அம்மாவும் காவல் துறையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இளம்பெண்ணின் தாய்க்கு பணி மாற்றம் கிடைத்தது. இதனால் அவர் தனது மகளுடன் வேறு பகுதிக்கு சென்றார். அங்கு தனக்கு அறிமுகமான லுகேஷ் என்பவரை இளம்பெண் காதலித்துள்ளார். இதனால் இளம்பெண் சேத்தனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். தொடர்ந்து சேத்தன் தொந்தரவு அளித்ததால் இளம்பெண் லுகேஷிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் லுகேஷ் கூறியபடி அந்த பெண் சேத்தனை ஒரு இடத்திற்கு வரவழைத்துள்ளார். அப்போது நண்பர்களுடன் தயாராக இருந்த லோகேஷ் சேத்தனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சேத்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேத்தன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.