சென்னை மாவட்டத்தில் உள்ள செந்நேரி குப்பம் அபிராமி நகரில் சுவாதி(30) என்ற பெண் வசித்து வருகிறார். தனது 25ஆம் தேதி சுவாதி தனது தம்பி சஞ்சய் ஸ்ரீராமுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த இரண்டு வாலிபர்கள் சுவாதியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் இரு சக்கர வாகனத்தை பிடித்து கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சுவாதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பரத் அவரது (32), சகோதரர் சதீஷ்(28) ஆகிய இருவரும் இளம் பெண்ணை மிரட்டியது தெரியவந்தது. பரத் காதலிப்பதாக கூறி சுவாதியிடமிருந்து பணம் மற்றும் நகையை வாங்கி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து சுவாதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் கோபத்தில் இருவரும் காரை ஏற்றி சுவாதியை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.