மயிலாடுதுறை மாவட்டத்தில் செல்வராஜ் என்று 62 வயது நபர் வசித்து வருகிறார். இவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் கருதியுள்ளனர். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. ஆனால் தகனம் செய்யப்பட்ட இரவே செல்வராஜ் திடீரென உயிரோடு வந்துள்ளார்.
அவர் என்னை புதைச்சிட்டீங்களா. எனக்கு சரக்கு எங்கே என்று கேட்டுள்ளார். அவர் சொன்னதை கேட்டதும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பயத்தில் அலறினர். பின்னர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் செல்வராஜ் வெளியூர் சென்றிருந்ததாகவும் ஆற்றில் இறந்த ஒருவரை செல்வராஜ் என நினைத்து குடும்பத்தினர் தகனம் செய்ததும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.