கனடா பிரதமர் ராஜினாமா? அடுத்த பிரதமராக போகும் தமிழர்! - யார் இந்த அனிதா ஆனந்த்?
WEBDUNIA TAMIL January 07, 2025 05:48 PM

கனடா பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த பிரதமராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

கனடா பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், சொந்த கட்சியினரின் எதிர்ப்பையும் அதிகம் பெற்றார். இதனால் அவரை பதவி விலக சொல்லி சொந்த கட்சியினரே அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதை தொடர்ந்து கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி இருந்து வரும் நிலையில், அதற்கான பட்டியலில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் பெயரும் இடம்பெற்று வருகிறது.

ALSO READ:

அனிதா ஆனந்த் கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை எஸ்.வி,ஆனந்த் மற்றும் தயார் சரோஜ் டி இருவருமே மருத்துவர்கள். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வு கலை பட்டம், ஆக்ஸ்போர்டில் சட்டவியல் படிப்பு, டோரண்டோவில் சட்ட முதுகலை உள்ளிட்ட படிப்புகளை முடித்த அனிதா ஆனந்த் 2010ல் அரசியலில் நுழைந்தார். முன்னாள் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகவும் இருந்தவர் அனிதா ஆனந்த். 2021ல் கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது இவர் பிரதமராக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.