“மீண்டும் தலைவராகிறார் அண்ணாமலை”..? போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக… அதுவும் பிரேக்கிங் நியூஸ் ஃபார்மெட்டில்…!!!
SeithiSolai Tamil January 08, 2025 06:48 PM

நாடு முழுவதும் தற்போது பாஜகவில் உள்காட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி பாஜகவில் மாநில தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜக கட்சிக்கும் விரைவில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருக்கிறார். தற்போது பாஜக கட்சியின் தலைவராக அண்ணாமலை இருக்கிறார்.

இவரே மீண்டும் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் மீண்டும் பாஜக கட்சியின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் என்று பிரேக்கிங் நியூஸ் ஃபார்மெட்டில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. மேலும் தலைவர் பதவிக்கு தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை இடையே கடும் போட்டி நிலவுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.