திருப்பதியில் அரங்கேறிய சோகம்..! கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!
Newstm Tamil January 09, 2025 12:48 PM

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனால் இவ்வழியாகச்சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
 

இந்நிலையில் இலவச தரிசன கட்டணம் நாளை (அதாவது இன்று )அதிகாலை முதல் வழங்கப்படும் நிலையில், திடீரெனெ நேற்றிரவு ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சேலத்தை சேர்ந்த பெண் மல்லிகா உள்ளிட்ட 6 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

 

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ள அவர், தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.