இந்தியாவில் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு வசதியாக இருக்கும். இதன் காரணமாக ரயில் பயணத்தை பலர் விரும்பும் நிலையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது sleeping pod அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் படுக்கை, குளிர்சாதனம், வைஃபை வசதி போன்றவைகள் உள்ளது. இதற்கான முன்பதிவு ஆன்லைனில் அல்லது ரயில்வே நிலையத்தில் செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான கட்டணம் மணிநேரம் அடிப்படையில் வசூலிக்கப்படும்.