பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் எடுத்த தம்பி.. ஆத்திரத்தில் சரமாரியாக குத்திக்கொன்ற அண்ணன் கைது!
Dinamaalai January 09, 2025 11:48 PM

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் ஷமீம் கான் (32). அவரது சகோதரர் (தம்பி) நசீம் கான் (27). நேற்று முன்தினம், குடிபோதையில் இருந்த சலீம், தனது பாக்கெட்டிலிருந்து நசீம் 500 ரூபாய்பணத்தை எடுத்ததாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் அதிகரித்து சண்டையாக மாறியது.

இதையடுத்து, சலீம், தனது சகோதரன் என்று கூடப் பார்க்காமல், நசீமை கத்தியால் குத்தினார். இதில், நசீம் சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சலீமை கைது செய்தனர்.

இதையடுத்து, இறந்த நசீமின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.