கடந்த வருடம் சென்னையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் உருமாறும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாட்டை நடத்தியுள்ள நிலையில், இந்த வருடம் தமிழ்நாட்டின் செழித்து வரும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பில் தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனம் செலுத்துவதற்கு வலுவூட்டலாகவும், உமாஜினில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான உத்திகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் உதவுவதாகவும், உற்பத்தித்திறனுக்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் சக்தியைப் முழுமையாக பயன்படுத்தும் விதத்திலும், மின்-ஆளுகைக்கான புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் யோசனைகளுடன் இன்றும் நாளையும் (ஜனவரி 9 மற்றும் ஜனவரி 10) மாநாடு நடைபெற உள்ளது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி தமிழகத்தைத் தயார்ப்படுத்த, உலகளவிலான தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முன்னணித் தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் சார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள் என அனைவர்களையும் ‘உமாஜின்’ தொழில்நுட்ப மாநாடு ஒன்றிணைத்து வருகிறது.
இந்தாண்டு ‘தமிழகத்தின் விரைந்த தொழில்நுட்பம் முன்னேற்றம்’ என்ற கருப்பொருளில் ‘உமாஜின் சென்னை 2025’ தொழில்நுட்ப மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
சிறந்த நிறுவனங்களின் தலைவர்கள், CXOக்கள், ஸ்டார்ட்-அப் மேவரிக்ஸ், தொழில்நுட்ப வல்லுநர்கள், திறன் மேம்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் துறைகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த மாநாடான இதில் யோசனைகள், நுண்ணறிவுகள்,அனைத்துத் துறைகளிலும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளைப் பெறுவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலையான கண்டுபிடிப்புகளுக்காகத் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தை ஒன்றிணைத்துச் செயல்பட வாய்ப்புகளை வழங்குகிறது.
பொதுக் கொள்கை, நிலைத் தன்மை, பொருளாதார மாற்றம் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தின் சமப் பங்களிப்பை உறுதிபடுத்தும் இந்த மாநாடு தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.