ராஜினாமா கடிதம் வைரல்..! என்னமா எழுதி இருக்காங்க பாருங்க..!
Newstm Tamil January 09, 2025 12:48 PM

இணையத்தில் ராஜினாமா கடிதம் ஒன்று பெரிதும் வைரலாகி வருகிறது. இதனை டெல்லியை சேர்ந்த EngineerHub என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் ரிஷப் சிங் பகிர்ந்திருக்கிறார்.

இவரது பதிவில், ராஜினாமா செய்வதற்கு மிகச் சிறந்த காரணங்களில் ஒன்றை தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தை ராகுல் பைர்வா என்பவர் தான் பணியாற்றிய நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார். ராஜினாமா கடிதத்தில், 2 ஆண்டுகள் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அடுத்தும் என்னுடைய சம்பளம் உயரவே இல்லை.

ஆனால் என்னுடைய நம்பிக்கை மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. டிசம்பர் 5, 2024 அன்று விற்பனைக்கு வரும் iQOO 13 ஸ்மார்ட்போன் வாங்க ரூ.51,999க்கு முன்பதிவு செய்ய விரும்பினேன். ஆனால் என்னுடைய சம்பளத்தில் அது சாத்தியமில்லை என நினைக்கிறேன். இதுபோன்ற இந்தியாவின் மிக வேகமான போனை வாங்கும் அளவிற்கு சம்பளம் வாங்கவில்லை எனில் எப்படி என்னுடைய வேலையும், வளர்ச்சியும் சிறப்பானதாக இருக்க முடியும்.

எனவே புதிய வாய்ப்புகளை தேடி ஒரு முடிவை எடுத்துள்ளேன். டிசம்பர் 4, 2024 அன்று தான் என்னுடைய கடைசி நாள். இதுநாள் வரை நான் பெற்ற அனுபவத்திற்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இது வழக்கமான பாணியில் இல்லாமல் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் பலரையும் கவர்ந்துள்ளது. சம்பள உயர்வு குறித்த அழுத்தமான பார்வையையும் உணர்த்தியிருப்பதாக கூறுகின்றனர்.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.