அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி பகுதியில் எடப்பாடி பழனிசாமி அக்கா மகன் வெற்றிவேலுக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு ஆலையில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இன்று 2வது நாளாக நீடிக்கிறது.
ஈரோட்டில் 2வது நாளாக எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் இரு கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 4 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. செட்டிப்பாளையத்தில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான என்.ஆர் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. வேலாங்காட்டுவலசு பகுதியில் ராமலிங்கம் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.