அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை எதிர்த்து பல அரசியல் கட்சி தலைவர்களும் அதனை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக கட்சியின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் ஞானசேகரனை திமுகவின் உறுப்பினர் இல்லை. அவர் ஆதரவாளர் என விளக்கம் கூறியுள்ளார். இந்த பதில் திருப்தி அளிப்பதாக இல்லை.
நிர்பயா நிதி மளிருக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தமிழக முதல்வர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. திமுகவின் அனுதாபி மிகவும் உயர் பதவியில் உள்ள அமைச்சருடன் ஒன்றாக எவ்வாறு போட்டோ எடுத்துக் கொள்ள முடியும்?. அப்படியானால் அனுதாபியே இவ்வளவு நெருக்கமாக இருந்தால், அவர் திமுக நிர்வாகியாக இருந்தால் இந்த வழக்கில் நீதி எவ்வாறு அமையும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.