மலேசியா ஓபன் பேட்மிண்டன்…. அபார வெற்றி பெற்ற இந்தியா…. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்….!!
SeithiSolai Tamil January 09, 2025 11:48 AM

மலேசியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியா சார்பாக சாத்விக் மற்றும் சிராக் ஜோடியும் தைவான் சார்பாக லு மிங் மற்றும் டாங்க் கை வே ஜோடியும் ஆடியது.

இந்த சுற்றில் முதல் செட்டில் இந்திய ஜோடி வெற்றி பெற இரண்டாவது செட்டில் தைவான் ஜோடி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 21 – 5 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.