பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 30000 குழந்தைகள் விட்டமின் ஏ குறைபாட்டால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது ,கீரையில் உள்ள கரோட்டின் என்று பொருள் விட்டமின் 'ஏ'வை நமக்கு வழங்குகிறது . .பின் வரும் கீரைகள் நமக்கு அளிக்கும் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.அகத்திக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
2. காசினிக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
3. சிறுபசலைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
4. பசலைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் தசைகளை பலமடையச் செய்யும்.
5. கொடிபசலைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
6. மஞ்சள் கரிசலையை அதிகமாக சாப்பிட்டால் கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
7. குப்பைகீரையை அதிகமாக சாப்பிட்டால் பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
8. அரைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் ஆண்மையை பெருக்கும்.