நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளாசப்பட்ட ஒரேயொரு இரட்டை சதத்திற்கு சொந்தக்காரரான மார்ட்டின் கப்டில் ஓய்வை அறிவித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆமாம், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நியூசிலாந்தின் ஒயிட்-பால் அணிகளில் ஒரு முக்கிய வீரரான குப்தில் 2009 இல் தொடங்கிய தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 198 ஒரு நாள் போட்டிகள், 122 டி20 போட்டிகள் மற்றும் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
2015 மற்றும் 2019 உலகக் கோப்பைகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் இருந்துள்ளார். கடந்த அக்டோபர் 2022ல் சர்வதேச போட்டியில் இறுதியாக விளையாடி இருந்தார்.
தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கப்டில் 3,531 ரன்களுடன் நியூசிலாந்தின் முன்னணி டி20 போட்டிகளின் ஸ்கோரராகவும், 7,346 ரன்களுடன் மூன்றாவது அதிக ஒரு நாள் போட்டிட்களில் ரன்களைக் குவிந்தவராகவும் இருக்கிறார். 2586 டெஸ்ட் ரன்களையும் குவித்துள்ளார்.
2015 உலகக் கோப்பையின் காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 237* ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் ஒரே ஒருநாள் இரட்டைச் சதம் என்ற சாதனையை மார்ட்டின் கப்டில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.