சென்னை அண்ணாநகர் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த குழு தற்போது அதிமுகவின் வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரை கைது செய்துள்ளது.
சிறுமி வன்கொடுமை வழக்கில் சதீஷ் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் இவருக்கு உடந்தையாக இருந்ததாக கருதி அதிமுக 103 வது வட்ட செயலாளர் சுதாகரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கில் சரியாக விசாரணை மேற்கொள்ளாத மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜியையும் கைது செய்தனர்.
இந்நிலையில் சுதாகர் பாலியல் வழக்கில் கைதானதால் தற்போது அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சுதாகர் கைது செய்யப்பட்ட நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.