நடிகர் விஷால் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சை மற்றும் முழுமையான ஓய்வு வேண்டும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை விளக்கம் அளித்துள்ளது.
நேற்று மதகஜராஜா பட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் உடல் சோர்வுடன் காணப்பட்டார். மேலும் கை, கால் நடுக்கத்துடன் நடிகர் விஷால் பங்கேற்றிருந்தார். அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், விஷாலின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், நடிகர் விஷால் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சை மற்றும் முழுமையான ஓய்வு வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.